திருஊட்டியானிக்கு வந்து அன்னை நாகபராசக்தி அம்மனை கைதொழுது வேண்டிய வரங்களை பெற்று வாழ்வில் சிறப்பை அடைந்து வரும் பக்தர்கள் ஏராளம். இங்கு வரும் அனைவருக்கும் வேண்டிய வரங்களை வேண்டியவாறு கொடுத்து அருள் புரிகிறார் அன்னை நாகபராசக்தி அம்மன். குழந்தை பேரு , திருமணம், வாழ்வில் உள்ள பல பிரச்சனைகளை நீக்கி தருகிறார் அருள்மிகு அன்னை ஸ்ரீ நாக பராசக்தி அம்மன்.
அருள்மிகு அன்னை ஸ்ரீ நாகபராசக்தி அம்மன் எழுந்தருளி இருக்கக்கூடிய ஆலயமானது முன்னொரு காலத்தில் மாட்டு தொழுவமாக இருந்தது. இந்த மாட்டுத் தொழுவத்தை செட்டியாரின் மனைவி லட்சுமி அம்மாள் பராமரித்து வந்தார். இந்த மாட்டு தொழுவத்தின் அருகில் ஒரு மண் புற்று ஒன்றும் இருந்தது. தினமும் பசுவிலிருந்து பாலை கறந்து வந்த லட்சுமி அம்மாள் அருகில் இருக்கும் புற்றிற்கு பாலை வார்த்து வந்திருக்கிறார். அப்படி பாலை வார்த்துக்கொண்டு தினமும் அந்த புற்றிற்கு பூஜையும் செய்து வந்திருக்கிறார்.
ஒருநாள் அந்த புற்றிலிருந்து அன்னை நாக வடிவமாக வந்து மாட்டு தொழுவத்தில் உள்ள பசுவிடம் பாலை அருந்தி இருக்கிறார். இந்த அதிசயத்தை கண்ணுற்ற லட்சுமி அம்மாள் சென்று தன் கணவன் செட்டியாரிடம் இப்படி அன்னை நாக வடிவமாக வந்து பசுவிடம் பாலை அருந்தி கொண்டு இருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்.
இதை கேட்ட செட்டியாரோ நாகம் பசுவிடம் பால் அருந்தி கொண்டிருப்பதை தவறாக நினைத்து அருகில் இருந்த ஒரு கருங்கல்லை எடுத்து நாகத்தின் மீது எறிந்து இருக்கிறார். அதில் நாகம் இறந்து போய்விட்டது அதே கணம் லக்ஷ்மி அம்மாவின் மீது அந்த அன்னை நாகபராசக்தி அம்மனின் அருள் இறங்கி தான் இந்த புற்றில் நாகமாக உருவெடுத்து தங்கி இருந்ததாகவும் தனக்கு இவ்வாறு நேர்ந்து விட்டதால் தனக்கு பூஜை செய்யும் படியும் கூறியுள்ளார். பிறகு அங்குள்ள அனைவரும் சேர்ந்து அன்னைக்கு கோவில் அமைத்து வழிபாடு செய்து வருகிறார்கள். கருணைகடலாக அன்னை இங்கு வரும் பக்தர்களுக்கு தாயாக இருந்து அனைவரின் குறைகளையும் நிவர்த்தி செய்து அனைவருக்கும் அருளையும் அன்பையும் வாரி வழங்கி கொண்டு இருக்கிறார்.
தானங்களில் சிறந்தது அன்னதானம். அருள்மிகு ஸ்ரீ நாக பராசக்தி அம்மன் கோவிலில் அன்னதானம் தினமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த அன்னதானத்திற்கு உபயம் எடுத்துக் கொள்பவர்களும் எடுத்துக் கொள்ளலாம்.
உடல் வலி, மூட்டு வலி, கை கால் வலி, இடுப்பு வலி இருப்பவர்கள் பல வகை மூலிகைகளை கலந்து சித்த மருத்துவ முறைப்படி தயாரிக்கப்படும் இந்த தேரையர் சித்தர் தைலத்தை வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.
தேரையர் சித்தர் வலி நிவாரண தைலம் அனைத்து வலிகளுக்கும் நல்ல பலனை கொடுக்கிறது. இதை வலி உள்ள இடங்களில் மேல் பூச்சாக மென்மையாக தேய்த்து பயன் பெறுங்கள்.

முடி உதிர்வை தடுக்க, தலை சூடு குறைய, பேன், பொடுகு நீங்க, இளநரை தடுக்க, அடர்த்தியான கூந்தல் சித்த மருத்துவ முறைபடி தயார் செய்யப்பட்ட தேரையர் சித்தர் தேங்காய் எண்ணெய் வாங்கி உபயோகப்படுத்தி பயன் பெறுங்கள்.
